search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமநாதபுரம் சொத்து வரி"

    சொத்துவரி உயர்வை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகளிலும் இன்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #Propertytax #DMK

    ராமநாதபுரம்:

    தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சி அலுவலகங்கள் முன்பாக இன்று (27-ந்தேதி) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

    இதைத் தொடாந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சி அலுவலகங்கள் முன்பு இன்று காலை மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ராமநாதபுரத்தில் மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில், தி.மு.க. உயர் நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் சுப.தங்கவேலன் முன்னிலையில் ஆர்ப்பாட் டம் நடந்தது. மாநில மகளிர் அணி துணை தலைவர் பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்எல்.ஏ. முருகவேல், மாநில சார்பு அணி நிர்வாகிகள் போஸ், கிருபானந்தம், ராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமேசுவரத்தில் நகர் பொறுப்பாளர் நாசர் கான் தலைமையிலும், தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி முன்னிலையிலும், கீழக்கரை நகர் பொறுப்பாளர் பசீர் அகமது தலைமையிலும், மாவட்ட துணை செயலாளர் சங்கு முத்துராமலிங்கம் முன்னிலையிலும், பரமக்குடியில் நகர் செயலாளர் சேது கருணாநிதி தலைமையிலும், முன்னாள் எம்.எல்.ஏ. திசைவீரன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். #Propertytax #DMK

    ×